சொந்த முயற்சியில மேல வந்தவரு அஜித் – நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவு

தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. ‘ஆத்தா உன் கோயிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் சின்னவர், புதிய முகம், அமைதிப்படை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினார்.

சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை கஸ்தூரி ஒரு சில படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடினார். இவரின் நடனத்திற்கு பலரும் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்தனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பு வளையத்துக்குள் இருந்து வருகிறார். அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில், இவர் நடிகர் அஜித் குறித்து பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன் , மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு… அவரையெல்லாம் எப்பிடி தெரியும்? ” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema