Tamilசெய்திகள்

சொத்து வரி உயர்வு – கிண்டலாக கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் முதல் 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக
பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரி உயர்வு வெறும் டிரைலர்தான். இனி வரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன என தெரிவித்துள்ளார்.