X

சையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை – மேகாலயா அணிகள் மோதின. மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மேகாலயாவின் நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களே எடுக்க முடிந்தது.

பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேகாலயா களம் இறங்கியது. ரவி தேஜா 61 ரன்களும், சஞ்சய் யாதவ் 55 ரன்களும் அடிக்க 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்து மும்பையை வீழ்த்தியது.

6-வது போட்டியில் மும்பையின் முதல் தோல்வி இதுவாகும். மேகாலயாவின் 2-வது வெற்றி இதுவாகும். தோல்வியடைந்தாலும் மும்பை முதல் இடத்தில் நீடிக்கிறது.

Tags: sports news