சேலம் அருகே சங்ககிரி சின்னகவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் கொண்டாளம்பட்டியில் கணவருடன் வாழ மறுத்த மகள் பிரியாவை, பழனிசாமி குடும்பத்தினர் அழைத்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு புறப்பட்டனர். அப்போது சின்னகவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது, நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத வகையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரில் ஒரு வயது குழந்தையும் அடங்கும். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை மீட்டு சங்ககிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் உள்பட இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கிசிக்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.