சேலம் அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர புறநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றினர். தீயை அணைக்கும் முயற்சியில் செவ்வாப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.