Tamilவிளையாட்டு

சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வெற்றி விழா – சீனிவாசன் அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த 2020 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. ஆனால் இந்த முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியதுடன், புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தது.

தகுதிச்சுற்று 1-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும், இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை அணியின் வெற்றி சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி விழாவாக கொண்டாடப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘‘டோனி இல்லாமல் சி.எஸ்.கே. கிடையாது. சி.எஸ்.கே. இல்லாமல் டோனி கிடையாது. பி.சி.சி.ஐ. விதிமுறைகளின்படி வீரர்களை தக்கவைப்போம்.

சி.எஸ்.கே. வெற்றியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். வெற்றி விழாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குவார். அவரது கையில் வெற்றிக்கோப்பையை கொடுத்து டோனி வாழ்த்து பெறுவார்’’ என்றார்.