கோட்டையைத் தவிர, சென்னையின் குடியிருப்புகளில் மிகப் பழமையான பகுதி சேப்பாக்கம். மெட்ராஸுக்கு அடிக்கல் நாட்டிய தினம் முதல் சேப்பாக்கம், மசூலா மீனவர்களின் குடியிருப்புப் பகுதியாக இருந்தது. நகரத்தை நிறுவியவர்களுடன் மசூலிப்பட்டினத்திலிருந்து மெட்ராஸுக்கு வந்த அவர்கள் நகரத்தின் முதல் குடிமக்கள் ஆவர்.
கோட்டையின் நெரிசலைக் குறைக்க, மெட்ராஸ் கவர்னர் எட்வர்ட் கிளைவ் சுங்க அலுவலகத்தைக் கோட்டையிலிருந்து வடக்கே மாற்றியபோது, கப்பல்கள் அதற்கு எதிரே நின்றன. 2 மைல்களுக்கு அப்பால் நங்கூரமிட்டிருந்த கப்பலில் இருந்து பொருள்களைக் கொண்டு செல்வதையே பிரதான தொழிலாகக் கொண்ட மசூலா மீனவர்கள், தினமும் பயணிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர்
கோட்டைக்கு வடக்கே தங்களுடைய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு புதிய இடம் கோரினர். அவர்களுக்கு ராயபுரம் ஒதுக்கப்பட்டது. சேப்பாக்கம் காலியானது. அப்போது பார்த்து கோட்டைக்குள் வாழ அனுமதி கேட்ட ஆற்காடு நவாப் இங்கு அரண்மனை கட்டும்படி கம்பெனியால் கேட்டுக்கொள்ளப்பட்டார்