X

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை வெளியிட்ட ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், அதிதீ சங்கர் என பலர் நடித்திருக்கும் இந்த டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.