X

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அளவு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது:-

செம்பரம்பாக்கம் ஏரியில் ஓராண்டுகளில் 540 எம்.எல்.டி. உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களுக்கு நீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும். செம்பரம்பாக்கத்தில் தற்போது 240 எம்.எல்.டி. தண்ணீர் உள்ளது. ஏழாண்டு காலமாக இதை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலையிடம் அனுமதி பெறப்பட்டு தற்போது அந்த குழாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் செம்பரம்பாக்கம் ஏரியில் 540 எம்.எல்.டி. உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags: tamil news