Tamilசினிமா

செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் ‘தலைவி’

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக படத்தை திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டது.

நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம் என கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார்.

தற்போது தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ‘தலைவி’ திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் அதிமுகவினரிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெறும்.

தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.