X

செப்டம்பர் 10 ஆம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பேரவை கூட்டம் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது. தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. துணைத்தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்து வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்பிக்கிறார்.

பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும் பொதுச்செயலாளர் விஷால் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் பேசுகின்றனர். துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி அனைத்து சினிமா சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் அன்று மட்டும் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamil cinema