செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதை அறிவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது.

அந்த வகையில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் ஊடக பிரதிநிதிகள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் இதன் வெற்றியாளர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ரிஸ்வான் கடந்த மாதம் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இதில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools