போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு வந்த இக்பால் பாஷா என்ற பயணியிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, அவரிடம் இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ 590 கிராம் எடையுள்ள கோகேன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இக்பால் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார். போதை பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.