X

சென்னை விமான நிலையத்தில் ரூ.62 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயங்கி வருகிறது. இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதனிடையே விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர் 960 கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.62 லட்சம் ஆகும். இதையடுத்து அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.