சென்னை விமான நிலையத்திற்குள் வரும் சினிமா தியேட்டர்!

சினிமா தியேட்டர் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் பி.வி.ஆர். 50 நகரங்களில் 584 திரைகளை வைத்திருக்கும் பி.வி.ஆர். நிறுவனம் நாடு முழுக்க இந்த ஆண்டுக்குள் 2000 திரைகளை அமைத்து விடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இப்போது சென்னை விமான நிலையத்துக்குள் 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் பல அடுக்கு கார் பார்க்கிங் வசதியுடன் சர்வதேச தரத்தில் அமைய உள்ளது.

இதுகுறித்து பி.வி.ஆர்.நிறுவன அதிகாரி பிரமோத் அரோரா கூறியிருப்பதாவது:-

ஆயிரம் இருக்கைகளுக்கு மேல் கொண்ட 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்க உள்ளோம். அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இது செயல்பாட்டுக்கு வரும்.

ஏர்போர்ட்டுக்கு வரும் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை பொழுதுபோக்காக கழிக்கும் வகையில் இது அமைய உள்ளது. ஆனால் தியேட்டருக்கு 20 சதவீதம் பயணிகளும் 80 சதவீதம் வெளியில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

சுமார் 15 கோடி ரூபாய் செலவில் இது அமைக்கப்பட உள்ளது. தியேட்டர்கள் மட்டும் அல்லாமல் உணவுப்பொருட்கள், குளிர்பான வகைகளும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools