சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியது

சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட வழித்தடங்கள் அமைக்கும் பணிகளுக்காக சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது. எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மேம்பாலத்தை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேம்பாலம் இடிப்பு பணி காரணமாக அப்பகுதியில்போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news