Tamilசெய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2 விரிவாக்க பணிகளுக்கான அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- சோழிங்கநல்லூர் இடையே 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கிறது.

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் தற்போது சுரங்கப்பாதை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், சென்னை மெட்ரோ திட்டம் – 2 விரிவாக்க பணிகளுக்கான சாத்திய கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு – ஆவடி, சிறுசேரி – கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க சாத்திய கூறுகள் குறித்த அறிக்கை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.