Tamilசெய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதம் 66 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13-ந் தேதி அன்று 2 லட்சத்து 65 ஆயிரத்து 847 பேர் பயணம் செய்தனர். டிசம்பர் மாதத்தை விட ஜனவரியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் அதிகமாக பயணம் செய்து உள்ளனர்.

சென்னை மெட்ரோ நிறுவனம் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை வழங்கி வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பு வசதியையும் அளிப்பதாக தெரிவித்து உள்ளது.