சென்னை முழுவதும் பரவலாக மழை!

சென்னை நகரில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. எழும்பூர், சென்டிரல், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், ரெட்டேரி, கொளத்தூர், அடையாறு, பல்லாவரம், ஆவடி, அம்பத்தூர், மீனம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் இன்று காலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்தது. சேலத்தில் ஓமலூர் அருகே ஆட்டுக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்த நிலையில், இன்று காலை பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த ஆண்டில் பெய்த முதல் மழை இது என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools