X

சென்னை துறைமுகத்தில் கடலில் விழுந்த கார் ஓட்டுநரின் உடல் மீட்பு

சென்னை துறைமுகத்தில் கடற்படை வீரர்களை அழைத்து வர நேற்று முன்தினம் இரவு கார் சென்றது. அந்த காரை முகமது சகி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார். துறைமுகத்தில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் கடற்படை வீரர் ஒருவரை காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஆனால், கார் டிரைவர் முகமது சகி காருடன் கடலில் மாயமானார். அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், கடலில் மூழ்கிய காரை மீட்டனர். ஆனால், காருக்கும் முகமது சகி இல்லாதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, முகமது சகியை மீட்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், காருடன் கடலில் விழுந்த ஓட்டுனர் முகமது சகி கடலமாக மீட்கப்பட்டார். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, காயமடைந்த கடற்படை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.