சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில் இன்று, 23.04.2024, 28.04.2024, 01.05.2024, 24.05.2024, மற்றும் 26.05.2024 ஆகிய நாட்களில் மாலை 5.00 மணி முதல் 11.00 மணி வரையில் மற்றும் 12.05.2024ம் தேதி 1.00 மணி முதல் இரவு 7.00 வரையிலும் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
1. விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால் ரோடு) இந்த சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல செல்ல அனுமதி இல்லை.
2. பெல்ஸ் சாலை : இந்த சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, பாரதிசாலை x பெல்ஸ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜாசாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். பாரதிசாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
4. வாலாஜா சாலை : அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜாசாலை வரும் M.T.V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம். வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜா சாலை வரும் B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
5. காமராஜர் சாலை : போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் M.T.V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம். போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதிசாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம். உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.
6. அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் :
1. அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜாசாலை வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
2.போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
3. காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
மேற்கண்ட மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.