X

சென்னை சேப்பாக்கத்தில் டோனி என்று மக்கள் ஆர்ப்பரித்த சத்தத்தை எங்கும் கேட்டதில்லை – மிட்செல் ஸ்டார்க்

இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ். டோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடத்துடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதனால் டோனி களம் இறங்கும்போதெல்லாம் ரசிகர்கள் டோனி… டோனி… என ஆர்ப்பரிக்கிறார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும்போது மைதானத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் ரசிகர்களும் டோனி… டோனி… என சத்தம் எழுப்பி வருகின்றனர். இது மற்ற வீரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்.எஸ். டோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் டோனி டோனி என ஆர்ப்ரித்த சத்தம், ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் மேல்போர்ன் மைதானத்தில் கூட இது போன்ற ஆர்ப்பரிப்பை கேட்ட முடியாது. இது மிகவும் வேடிக்கையானது.

இவ்வாறு ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.