பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு முன் கட்சியை மேலும் வலுப்படுத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.
தொகுதி வாரியாக மாவட்டச் செயலாளர்களை நியமித்ததோடு பூத்கமிட்டி அமைக்கவும், இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்த பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். ஒரு சில மாவட்டங்களில் இதுவரையில் நியமிக்கப்படாத பொறுப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். சிலர் ஏற்கனவே வகித்து வந்த பொறுப்புகளை மாற்றி விட்டு அதற்கு மாற்று பொறுப்புகளில் நியமித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் திரைப்பட இயக்குனர் நடிகர் எஸ்.ரவிமரியா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்-கே.கே.உமாதேவன், துணை செயலாளர்கள் கோ.அப்பா துரை (மதுராந்தகம்), அனந்த மங்கலம் சுப்பிரமணியன் (அச்சிறுப்பாக்கம்) ஜே.கே.சிவா (அரியலூர்). வழக்கறிஞர் பிரிவு துணைச் செலாளராக ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி எஸ். தமிழ்செல்வன், மருத்துவ அணி இணை செயலாளராக பெருந்துறை டாக்டர் பொன்னுசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். புரட்சி தலைவி பேரவை துணை செயலாளர் வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, புறநகர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ஏ.பொன்னுசாமி ஆகியோர் இன்று முதல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பட்டியலில் அண்ணாநகர் பி.அதிவீர ராம பாண்டியன் இணைக்கப்பட்டுள்ளார். அவர் இனி தொலைக்காட்சி சமூக தொடர்பு ஊடகங்களில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, 178 மேற்கு வட்ட செயலாளர் பொறுப்பில் ஏ.எம்.ராஜா ஆகியோர் இன்று முதல் நியிமிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட புரட்சி தலைவி பேரவை இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.ஜி.குமரன், டாக்டர் என்.ரங்கராஜன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளராக இருக்கும் ஏ.சி.ரவிபாபு மதுராந்தகம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அப்பாதுரை, அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் அனந்த மங்கலம் பி.சுப்பிரமணியன், மதுராந்தகம் நகரச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.ரவி, கருங்குழி பேரூராட்சி செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.பழனி, துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.டி.ஜெயராஜ் ஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட துணை செயலாளராக கே.பழனி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட புரட்சி தலைவி பேரவை மாவட்ட இணை செயலாளர் வி.ரவி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் சுரேஷ் ராமச்சந்திரன், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.குமரன், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.ரங்கராஜன், மதுராந்தகம் நகரச் செயலாளர் கே.சி.சரவணன். கருங்குழி பேரூராட்சி செயலாளர் ஆர்.டி. ஜெய ராஜ், பேரூராட்சி துணை செயலாளர் பத்மநாபன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.