சென்னை கே.கே. நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் 2 பேருந்துகள், ஒரு லாரி, 2 ஆட்டோக்கள், ஒரு வேன் உள்ளிட்ட வாகனங்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து குறித்து எம்.ஜி.ஆர். நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.