சென்னை – கும்மிடிப்பூண்டு புறநகர் ரெயில் சேவை பாடிப்பு – மக்கள் கடும் அவதி

சென்னை-கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் பழுது காரணமாக எண்ணூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ரெயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில் சேவை பாதிப்பால் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news