X

சென்னை காவல்துறை சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் பொங்கல் விழாவை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வரும் பொங்கல் விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

காவலர்களின் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட முதல்வர், கயிறு இழுக்கும் போட்டியையும், பாரம்பரியமிக்க நடன நிகழ்ச்சியையும் தொடக்கி வைத்தார்.

காவல்துறை பொங்கல் விழாவில் டிஜிபி திரிபாதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.