சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவியது
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:-
கொரோனாவை விட வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன
வட மாநிலங்கள் சிலவற்றிலும், அண்டை மாநிலமான கேரளாவிலும் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒரே ஒரு நபருக்குத்தான் தொற்று இருந்தது. இப்போது மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் ஒமைக்ரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அளவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
சென்னையில் 26 பேரும், மதுரை – 4, திருவண்ணாமலை – 2, சேலத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.