சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் பலகோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது. இதேபோல் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை, நெல்லை மற்றும் நாமக்கல் உள்டபட 18 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news