சென்னை அண்ணாசலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்து சோதனை முயற்சி நடைபெற இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:

* ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணாசாலை- ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலை- ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை.

* பட்டுல்லாஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை- பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.

* ஜி.பி.ரோடு சந்திப்பு மற்றும் பின்னி சாலையில் இருந்து அண்ணாசாலை வந்து ஒயிட்ஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் ரோடு சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் ரோடு, ஒயிட்ஸ் ரோடு சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* ராயப்பேட்டை மணிகூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை.

* திரு.வி.க.- ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* அண்ணாசாலை- பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி அண்ணாசாலையில் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ளே ‘யுடர்ன்’ வளைவில் திரும்பி பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம்.

மேற்கண்ட தகவல் போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news