சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 191 ரன்கள் குவித்தது. பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களம் இறங்கியது. ஆனால் 7 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெல்ல கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீசவில்லை எனத் தெரியவந்தது. இதனால் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்-க்கு ஐபில் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி முதன்முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. இதனால் கடைசி 2 ஓவரின்போது பவுண்டரில் எல்லையில் நான்கு வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools