சென்னையை புரட்டி எடுக்கும் கொரோனா – ராயபுரம், கோடம்பாக்கத்தில் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 1,041 பேருக்கும், திரு.வி.க.நகரில் 790 பேருக்கும், அண்ணாநகரில் 554 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 581 பேரும், தேனாம்பேட்டையில் 746 பேரும், திருவொற்றியூரில் 147 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 522 பேருக்கும், பெருங்குடியில் 86 பேருக்கும், அடையாறில் 367 பேருக்கும், அம்பத்தூரில் 317 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 80 பேருக்கும், மாதவரத்தில் 121 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 95 பேருக்கும், மணலியில் 86 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools