Tamilசெய்திகள்

சென்னையை சேர்ந்த 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனை பாராட்டிய பிரதமர் மோடி!

சென்னையை சேர்ந்த பிரபல 5 ரூபாய் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் கடந்த 19-ந்தேதி மரணம் அடைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றிய மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்கள் மருத்துவரான மறைந்த ஜெயச்சந்திரனை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக மோடி தனது உரையில் கூறி இருப்பதாவது:-

டாக்டர் ஜெயச்சந்திரன் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருந்தார்.

இதேபோல 15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த கர்நாடக பெண் நரசம்மாவும் ஏழைகளுக்கு சேவை புரிந்துள்ளார்.

உலகின் உயரமான சர்தார்படேல் சிலையானது இந்தியாவின் ஒற்றுமைக்கான ஆதாரமும் நமது பண்டிகைகள் கலாசாரத்தையும், விவசாயத்தையும் சார்ந்திருக்கும் மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகைகளில் எடுக்கப்படும் புகைப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் புகைப்படங்களை பகிர்வதால் இந்தியாவின் கலாச்சாரம், பன்முகத்தன்மையை அனைவரும் காணமுடியும்.

2018-ம் ஆண்டில் தான் உலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 95 சதவீத கிராமங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

எளிதாக தொழில் தொடங்குவதற்கான பட்டியலில் இந்தியா முன்னேற்றம் அடைந்தது. இந்தியாவின் வளர்ச்சி பயணம் வரும் ஆண்டிலும் தொடரும்.

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இவ்வாறு மோடி தனது மன் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *