Tamilசெய்திகள்

சென்னையில் மேலும் 5 புதிய விளையாட்டுத் திடல்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை தண்டையார்பேட்டை-சர்மா நகரில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளி மற்றும் சென்னை தொடக்கப் பள்ளியை ரூ.2 கோடியே 40 லட்சம் செலவிலும், ராயபுரம்-கல்லறை சாலையில், மணிகண்டன் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி மற்றும் சென்னை தொடக்கப் பள்ளியை ரூ.4 கோடியே 53 லட்சம் செலவிலும், அண்ணாநகர்-செனாய்நகர், சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் சென்னை தொடக்கப் பள்ளியை ரூ.4 கோடி செலவிலும், அடையாறு-காந்தி கிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியை ரூ.2 கோடியே 6 லட்சம் செலவிலும் புதுப்பிக்கப்பட்ட பள்ளிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அம்பத்தூர் அத்திப்பட்டில் உள்ள திறந்தவெளி நிலம், டி.ஐ. சைக்கிள் சாலை ரெயில் விஹார் குடியிருப்பில் திறந்தவெளி நிலம், தாமிரபரணி தெருவில் உள்ள புது செஞ்சுரி மருத்துவமனை திறந்தவெளி நிலம், எம்ரால்டு பிளாட்ஸ் மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள திறந்தவெளி நிலம், நாராயணா நகர் திறந்தவெளி நிலம், டி.வி.எஸ் அவென்யு 34-வது தெருவிலுள்ள திறந்தவெளி நிலம், திருமங்கலம் ரோட்டின் திறந்தவெளி நிலம், சோழிங்கநல்லூர்-நூக்கம்பாளையம் இணைப்பு சாலை, விநாயகா நகர் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் பவுண்டரி தெரு, வளசரவாக்கம்-நொளம்பூர் எஸ் & பி கார்டன் 8-வது தெரு மற்றும் ராமாபுரம் ஆகிய இடங்களில் 19 புதிய பூங்காக்களையும், சோழிங்கநல்லூர்-சக்தி நகரில் மறுசீர மைக்கப்பட்ட ஒரு பூங்காவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராயபுரம் காத்படா பிரதான சாலையில் உள்ள திறந்தவெளி நிலம், மாதவரம்-மாதவரம் ரிங்ரோடு மற்றும் எம்.ஜி.ஆர். 2-வது தெரு, ஆலந்தூர் சேது லட்சுமி அவென்யு, மதுரவாயல் கங்கா நகரில் உள்ள காந்தி தெரு ஆகிய இடங்களில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 5 புதிய விளையாட்டுத் திடல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கொடுங்கையூர் வார்டு 35, ராயபுரம் ராட்லர் தெரு (பெருமாள்பேட்டை) மற்றும் கொண்டித்தோப்பு, திரு.வி.க. நகர் வ.உ.சி. நகர் 1வது தெருவில் புளியந்தோப்பு, அம்பத்தூர் முகப்பேர் மேற்கு காளமேகம் சாலை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அம்பத்தூர் மண்டலம், வார்டு-89 மற்றும் வார்டு-92-ல் முகப்பேர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் புதிய பாதாள சாக்கடை திட்டம் அமைத்திடும் வகையில் ரூ.2 கோடியே 62 லட்சம் செலவில் கழிவுநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணி; அம்பத்தூர் மண்டலம், வார்டு-93-ல் பாடிக்குப்பம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் கழிவுநீர் உந்துநிலையம் அமைத்தல் மற்றும் கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் பணி; நெசப்பாக்கத்தில் ரூ.74 கோடியே 12 லட்சம் செலவில், நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட தொடர் தொகுதி முறை புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம்; சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக ரூ.2 கோடியே 23 லட்சம் செலவில், கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர் நகர் கால்வாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் மொத்தம் ரூ.561 கோடியே 26 லட்சம் செலவிலான சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 14 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.