தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மாநிலம் முழுவதும் வரும் 7ம்தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் 7ம் தேதி முதல் சென்னையில் விமான நிலையம் முதல் வண்ணரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையில் 5 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.