X

சென்னையில் நேற்று நள்ளிரவு பல இடங்களில் மழை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சதத்தை அடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதற்கு நேர்மாறாக ஒரு சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இருப்பினும், சென்னையை பொறுத்தவரையில் கோடை மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. பலத்த காற்றும் வீசியதால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
இதனால், மக்கள் வெகு நாட்களுக்கு பிறகு குளுமையான வானிலையை உணர்ந்தனர்.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி, மின்னல், காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், திருபத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.