சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் – யூசுப் ஷபீர் சாம்பியன் பட்டம் வென்றார்
சென்னை எழும்பூரில் உள்ள DU பவுலில் நடைபெற்ற 3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்போட்டியில் முன்னாள் மாநில சாம்பியன் யூசுப் ஷபீர், கணேஷ்.என்.டி-யை (384-355) வீழ்த்தினார் சாம்பியன் பட்டம் வென்றார்.
இரண்டு சுற்றுகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில், கணேஷ், யூசுப்பை (177-170) விட 7 பின்கள் முன்னிலையுடன் முதல் சுற்றை முடித்தார். 2 வது சுற்றில் யூசுப் 178 புள்ளிகளுடன் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் 29 பின்களின் ஒட்டுமொத்த பின்ஃபால் வித்தியாசத்தில் கணேஷை யூசுப் ஷபீர் வீழ்த்தினார்.
முந்தைய நாள், இரண்டு சுற்றுகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய முதல் அரையிறுதியில், முதல் நிலை வீரரான யூசுப் ஷபீர் நான்காம் நிலை வீரரான அக்ரமுல்லா பைக்-ஐ இரண்டு கேம் நாக் அவுட்டில் 78 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். யூசுப் ஷபீர் போட்டியின் 2வது மற்றும் 3வது சுற்றில் 18 சுற்றுகளின் தகுதி புள்ளிகளை சராசரியாக 187.06 (பின்ஃபால் 3367) இல் முடித்தார். இரண்டாவது அரையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான ஆனந்த் பாபு, மூன்றாம் நிலை வீரரான கணேஷ் என்.டி-யை எதிர்த்து விளையாடினார். கணேஷ் 32 பின்கள் வித்தியாசத்தில் ஆனந்தை (389-357) தோற்கடித்து இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார்.
சிறப்புப் பரிசுகள்:
6 கேம் பிளாக்கில் அதிகபட்ச சராசரி: கணேஷ்.என்.டி (199.00)
18 ஆட்டங்களுக்குப் பிறகு அதிகபட்ச சராசரி: யூசுப் ஷபீர் (187.06)
இப்போட்டியின் நிறைவு விழாவில் ’அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’, ‘தீராக் காதல்’ போன்ற படங்களை இயக்கியிருக்கும் ரோகின் வெங்கடேஷன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.