சென்னையில் திடீர் கன மழையால் விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் காற்று வேகமாக வீசியதுடன், மழை வெளுத்து வாங்கியது.

இதனால் சென்னை விமான நிலையத்தில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. 6 சர்வதேச விமானங்கள் உள்பட 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news