Tamilசெய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்றத் தாழ்வுடனேயே இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,792-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு விலை
சற்று குறைந்து 26, 27-ந்தேதிகளில் ரூ.38,742-க்கு விற்பனையானது.

அதன்பிறகு தொடர்ச்சியாக 3 நாட்கள் விலை குறைந்து 30-ந் தேதி ரூ.38,320-க்கு விற்பனையானது. கடந்த 31-ந் தேதி உயரத் தொடங்கிய தங்கம் இன்று ரூ.38,400-க்கும், ஏப்ரல் 1-ந்தேதி ரூ.38,600-க்கும்
விற்றது. நேற்று வரை தொடர்ச்சியாக அதே விலையிலேயே நீடித்தது.

இந்தநிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.176 குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,424-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.22 குறைந்து ரூ.4,803-க்கு விற்கப்படுகிறது.

ஆனால் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.71.30-க்கு விற்றது. இன்று கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.71.40-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.71,400-க்கு
விற்கப்படுகிறது.