X

சென்னையில் தங்கம் விலை குறைந்தது – ஒரு சவரன் ரூ.56,560 க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த திங்கட்கிழமை விலை மாற்றமின்றியும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.57,080-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.56,560-க்கும் கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,070-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.