சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,760-க்கு விற்கப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்கப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,845-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,860-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.78-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.