X

சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியான விவரம் இதோ

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் 44 ஆயிரத்து 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 645 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,607 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 4,794 பேருக்கும், திரு.வி.க.நகரில் 3,741 பேருக்கும், அண்ணாநகரில் 4,766 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 5,355 பேரும், தேனாம்பேட்டையில் 5,213 பேரும், திருவொற்றியூரில் 1,652 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,880 பேருக்கும், பெருங்குடியில் 899 பேருக்கும், அடையாறில் 2,684 பேருக்கும், அம்பத்தூரில் 1,644 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 978 பேருக்கும், மாதவரத்தில் 1,262 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 860 பேருக்கும், மணலியில் 669 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags: south news