சென்னையில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் தாக்கம் நூறை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1458 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் சென்னையில் 200க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்படுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: chennai news