சென்னையில் எந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகம் – மாநகராட்சி பட்டியல் வெளியிடு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7,117 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,272 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 1,077 பேருக்கும், திரு.வி.க.நகரில் 835 பேருக்கும், அண்ணாநகரில் 586 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 610 பேரும், தேனாம்பேட்டையில் 786 பேரும், திருவொற்றியூரில் 161 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 532 பேருக்கும், பெருங்குடியில் 92 பேருக்கும், அடையாறில் 391 பேருக்கும், அம்பத்தூரில் 321 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 84 பேருக்கும், மாதவரத்தில் 133 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 101 பேருக்கும், மணலியில் 93 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.