Tamilசெய்திகள்

சென்னையில் உள்ள 35 மாநகராட்சி பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடம் கடப்படுகிறது

சென்னையில் 35 மாநகராட்சி பள்ளிகளுக்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறை கட்டிடம் விரைவில் கட்டப்பட உள்ளன. சென்னையில் பழுதடைந்துள்ள மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு வரும் கல்வியாண்டு முதல் நவீன ‘ஸ்மார்ட்’ பள்ளி கட்டிடங்களாக மாற்றப்பட உள்ளன.

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் 5 பள்ளிகள் மறுவடிவமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்படுகிறது. இதேபோல் பெருங்குடி மண்டலத்தில் 3 பள்ளிகள் நவீனப்படுத்தப்பட உள்ளன. புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். சென்னை மாநகராட்சி 35 பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை விரைவில் மறுவடிவமைப்பு மற்றும் நவீனமயமாக்கபட உள்ளன.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தலா 5 முதல் 2 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. இந்நிலையில் தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள 5 பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு விரைவில் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதேபோல் பெருங்குடி மண்டலத்தில் 3 மாநகராட்சி பள்ளிகள் நவீன மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், ஓட்டேரி போன்ற பகுதிகளில் உள்ள 4 பள்ளிகளில் கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. கீழ்ப்பாக்கம் நேரு பூங்காவிற்கு அருகில் உள்ள புல்லாபுரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு உள்ளது.

இப்பள்ளிக்கு கடந்த 14 ஆண்டுகளாக பெயிண்ட் வர்ணம் பூசப்படவில்லை. இப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாநகராட்சி நிலத்தில் ஒரு சிறிய அளவிலான இடத்தில் இப்பள்ளி அமைந்து உள்ளது. காவல் துறைக்கு சொந்தமான மற்றொரு நிலத்தை பயன்படுத்தி பள்ளியை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புரசைவாக்கம் சுந்தரம் தெருவில் பாழடைந்த கட்டிடத்துடன் கூடிய மற்றொரு பள்ளியில் 200 மாணவர்கள் படிக்கின்றனர். நடுநிலைப் பள்ளியில் 15 வகுப்பறைகள் உள்ளன.

கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சில வகுப்பறைகள் கொரோனா தொற்றின் போது பயன்படுத்தப்பட்டதால் சேதமடைந்தன.கொரோனாவுக்கு பிறகு சில வகுப்பறைகள் மூடப்பட்டு இருந்தன.
புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து இருந்தனர். அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள மாநகராட்சி மழலையர் பள்ளிக்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதியுடன் வகுப்பறைகள் அமைக்கவும் அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.