சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – ஒருவர் கைது
சென்னையில் தி.நகர் பகுதியில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
3 மதுபாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக பாஜ.க.தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.