சென்னையில் இருந்து 9 மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது.
இதற்கான வாக்குப்பதிவு வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னையில் அதிகளவில் வசிக்கின்றனர்.
அவர்களும் தேர்தலின் போது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்க முன்வந்துள்ளது.
இதையொட்டி நாளையும் (5-ந்தேதி), 8-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) 9 மாவட்டங்களுக்கு தேவையான கூடுதல் பஸ்களை விட போக்குவரத்து கழகங்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
நீண்ட தூரம் செல்பவர்கள் முன்பதிவு செய்தும் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.