X

சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் வீண் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் தெரிவித்த இண்டிகோ, “சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற இண்டிகோ விமானம் 6E 5149-க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானம் மும்பையில் தரையிறங்கியதும், பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.”

“முதற்கட்டமாக விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தினர். சோதனை முழுமை பெற்றதும், விமானம் மீண்டும் பயன்பாட்டு பகுதிக்கு அனுப்பப்படும்,” என்று தெரிவித்தது.

கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் பயணிகள் என பலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.