சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி

3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ‘கேலோ இந்தியா’ போட்டியை தொடங்கி வைத்தார்.

நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இன்று திருச்சி செல்வதற்காக சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் புறப்பட்டார். இதைத்தொடர்ந்து அண்ணா சாலை, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். சென்னையில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 10.15க்கு செல்லும் அவர் 10.20 மணிக்கு ஹெலிகாப்டரில் பயணித்து பஞ்சகரை சாலையை அடைகிறார். 10.50 மணிக்கு சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் மோடி 11.00 – 12.30 வரை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news