சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்
சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சைலேந்திர பாபு பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய டிஜிபி சங்கர் ஜிவால் 1990-ல் தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். 1993-ல் மன்னார்குடி ஏஎஸ்பி, 1995ல் சேலம் மாவட்ட எஸ்பியாக சங்கர் ஜிவால் பணியாற்றினார். மத்திய போதைப்பொருள் தடுப்படுப்பிரிவு எஸ்.பி மற்றும் திருச்சி போலீஸ் கமிஷனர் போன்ற பதவிகளை சங்கர் ஜிவால் வகித்துள்ளார்.
2008- 2011ம் ஆண்டு வரை உளவுத்துறையில் டிஜஜி மற்றும் ஜஜி-ஆக இருந்தார். 2011- 2021ம் ஆண்டு வரை அதிரடிப்படை, ஆயுதப்படைகளிலும், 2021ல் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார்.