சென்னையின் பல பகுதிகளில் கன மழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். மேலும், சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், மாம்பலம், எழும்பூர், பூரசைவாக்கம், மெரினா கடற்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.